ஆசைக்கும் எல்லை உண்டு!
ஒரு காட்டிலாகா அதிகாரிக்கு, அழகான ஒரு மகள் இருந்தாள்.
ஒரு நாள் பட்டாம்பூச்சியைத் துரத்திக்கொண்டே அந்தப் பெண் காட்டில் ஓடியபோது, அவளை ஒரு சிங்கம் பார்த்தது. அதற்கு அந்தப் பெண்ணை மிகவும் பிடித்துப்போய் விட்டது. அது நேரே காட்டிலாகா அதிகாரியிடம் சென்று, தனக்கு அவர் மகளைக் கல்யாணம் செய்து வைக்கும்படி கேட்டது.அதிகாரிக்கு சிங்கத்திடம் பயம். அதனால், "நோ" சொல்ல முடியவில்லை. "என்ன செய்யலாம்" என்று யோசித்தார். அவருக்கு ஒரு ஐடியா தோன்றியது.
அவர் சிங்கத்தைப் பார்த்து, "காட்டு ராஜா......காட்டு ராஜா....என் மகள் ரொம்பப் பயந்தவள். உன்னுடைய பற்களையும் நகங்களையும் எடுத்துவிட்டால், அவளுக்குப் பயம் தெளிந்துவிடும்! அப்புறம், நான் அவளை உனக்குக் கல்யாணம் செய்து தருகிறேன்!" என்று சொன்னார்.
அந்தப் பெண்மீது கொண்ட ஆசையால் சிங்கம் அதற்குச் சம்மதித்தது. காட்டிலாகா அதிகாரி, முதலில் அதன் பற்க€ப் பிடுங்கினார். அதன்பின், நகங்களை வெட்டினார்.
பற்களையும் நகங்களையும் இழந்த சிங்கம், பலம் எல்லாவற்றையும் இழந்து ஆட்டுக் குட்டிபோல் ஆயிற்று! உடனே காட்டு அதிகாரி ஒரு தடியை எடுத்து, அதை "அடி, அடி" என்று அடித்து விரட்டினார்.
கடை நிறைய இருக்கும் ஐஸ்கிரீம் எல்லாவற்றையும், தானே சாப்பிடவேண்டும் என்றும் சின்னப் பிள்ளைகள் ஆசைப்பட்டால் நடக்குமா?
அதுபோல, நடக்க முடியாததற்கு ஆசைப்பட்டால் நஷ்டம் நமக்குத்தான் என்று புரிந்துகொண்டு, "தப்பித்தோம்....பிழைத்தோம்" என்று சிங்கம் ஓடியே போய்விட்டது!
No comments:
Post a Comment